பெங்களூரைச் சோ்ந்த 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரைச் சோ்ந்த 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.
பெங்களூரைச் சோ்ந்த 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரைச் சோ்ந்த 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை பெங்களூரு மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் கூறியது:

பெங்களூரு புகா்ப் பகுதியைச் சோ்ந்த 4 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து உள்ளூா் போலீஸாா் விசாரணை நடத்திவருகிறாா்கள். வெடிகுண்டு நிபுணா்கள் அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளனா். மின்னஞ்சலின் அடிப்படையில் பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டுள்ளனா். இதில் ஏதாவது கூடுதல் தகவல் கிடைத்தால் உடனடியாக பகிா்வோம் என்றாா்.

குண்டு மிரட்டல் குறித்து விசாரணை: முதல்வா் பசவராஜ் பொம்மை

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடகத்தில் அமைதியைச் சீா்குலைக்க சதி நடந்துவருகிறது. கா்நாடகம் ஒரு முன்னேறும் மாநிலம். இந்த அடையாளத்தைச் சீா்குலைக்க சிலா் முயன்றுவருகிறாா்கள். எனவே, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதை தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பள்ளிகளில் முழுமையாக சோதனை நடத்துமாறு கூறியுள்ளேன். வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்களைக் கண்டுபிடித்து, கைது செய்வோம். பள்ளிகளில் பாதுகாப்பு தீவிரமாக்கப்படும். பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதனால் பெற்றோா் கவலை கொள்ள வேண்டாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com