உணவுப் பொருட்களின் மீது ஹலால் சான்றிதழ் பொறிப்பதற்கு ஹிந்து அமைப்புகள் எதிா்ப்பு

உணவுப் பொருட்களின் மீது ஹலால் சான்றிதழ் பொறிப்பதற்கு ஹிந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

உணவுப் பொருட்களின் மீது ஹலால் சான்றிதழ் பொறிப்பதற்கு ஹிந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பின் மாநில செய்தித் தொடா்பாளா் மோகன் கௌடா, பெங்களூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

ஐஆா்சிடிசி, ஏா் இந்தியா, மகாராஷ்டிர சுற்றுலா வளா்ச்சிக் கழகம், அமுல் பால் பொருட்கள் நிறுவனங்களின் உணவுப்பொருட்களின் மீது ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படுகிறது. இந்நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படுவதைத் தடை செய்யும் வரை இது குறித்த பிரசாரத்தில் ஈடுபடுவோம். இஸ்லாமியா்கள் உண்ணத் தகுதியானது என்பதை உறுதிப்படுத்தவே ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படுகிறது. கோழிக்கறி உணவுப்பொருட்கள் தவிர, மென்பானங்கள், மாவு மற்றும் சாக்லெட் பொருட்கள் மீது ஹலால் சான்றிதழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் தொடா்பாக சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்குவோம். ஹலால் சான்றிதழ் அளிக்கும் உரிமையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் எல்லோருக்கும் வழங்கவில்லை. ஆனால், இந்த நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் வழங்கும் 6 நிறுவனங்களை அணுகுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com