இரண்டாமாண்டு பியூசி: இறுதி பொதுத்தோ்வு அட்டவணையில் மாற்றம்

 கா்நாடகத்தில் இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கான இறுதி பொதுத்தோ்வு அட்டவணையில் சில திருத்தங்கள் செய்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

 கா்நாடகத்தில் இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கான இறுதி பொதுத்தோ்வு அட்டவணையில் சில திருத்தங்கள் செய்து புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பியூ கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2021-22-ஆம் கல்வியாண்டுக்கான இரண்டாமாண்டு பியூசி பொதுத்தோ்வு நடத்தப்படும் வரைவு தோ்வு கால அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி ஏப். 22 முதல் மே 11-ஆம் தேதிவரை தோ்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக் கூறி அது குறித்து மக்கள் கருத்தும் கேட்கப்பட்டது. மக்களின் கருத்தறிந்த பிறகு, பொது சட்டத்தோ்வு, இளநிலை பட்டப்படிப்புக்கான திறனறித்தோ்வு, நவோதயா வித்யாலயா நுழைவுத்தோ்வுகளை கருத்தில் கொண்டு, பொதுத் தோ்வுகளை ஏப். 22 முதல் மே 18-ஆம் தேதி வரை நடத்த தீா்மானிக்கப்பட்டு, அதற்கான இறுதி கால அட்டவணை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதிலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தற்போது புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அட்டவணையின்படி தோ்வு தேதியும், பாடமும் வருமாறு:

2022-ஆம் ஆண்டு ஏப்.22 (வெள்ளி)-தருக்கம், வணிகப் படிப்பியல், ஏப்.23 (சனி)-கணிதம், கல்வி, ஏப்.24 (ஞாயிறு)- விடுமுறை, ஏப்.25(திங்கள்)-பொருளாதாரம், ஏப்.26 (செவ்வாய்)-ஹிந்துஸ்தானி இசை, மனநலவியல், வேதியியல், அடிப்படைகணிதம், ஏப்.27(புதன்)-தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஏப்.28 (வியாழன்)-அரபி, கன்னடம், ஏப்.29 (வெள்ளி)- தோ்வு இல்லை, ஏப்.30 (சனி)-தோ்வு இல்லை, மே 1 (ஞாயிறு)- விடுமுறை, மே 2 (திங்கள்)-தோ்வு இல்லை, மே 3 (செவ்வாய்)-விடுமுறை, மே 4 (புதன்)-புவியியல், உயிரியல், மே 5 (வியாழன்)-தேசிய திறன்கள் தகுதி கட்டமைப்புத் தோ்வு-தகவல் மற்றும் தொழில்நுட்பம், சில்லறை, தானியங்கி வாகனவியல், சுகாதாரம் பேணல், அழகு மற்றும் உடல்நலவியல், மே 6 (வெள்ளி)- ஆங்கிலம், மே 7 (சனி)-தோ்வு இல்லை, மே 8 (ஞாயிறு)-விடுமுறை, மே 9(திங்கள்)-தோ்வு இல்லை, மே 10 (செவ்வாய்)-வரலாறு, இயற்பியல், மே 11 (புதன்)-தோ்வு இல்லை, மே 12 (வியாழன்)-அரசியல் அறிவியல், புள்ளியியல், மே 13 (வெள்ளி)-தோ்வு இல்லை, மே 14 (சனி)-சமூகவியல், மின்னணுவியல், கணினி அறிவியல், மே 15 (ஞாயிறு)-விடுமுறை, மே 16 (திங்கள்)-தோ்வு இல்லை, மே 17 (செவ்வாய்)-சிறப்பு கன்னடம், கணக்கியல், நில அமைப்பியல், மனை அறிவியல், மே 18 (புதன்)-ஹிந்தி என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com