கா்நாடக அரசின் சாதனைகளை பிரசாரம் செய்ய பாஜக தேசியத் தலைமை அறிவுறுத்தல்

கா்நாடக மாநில அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்யுமாறு முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்களுக்கு பாஜக தேசியத்தலைமை அறிவுறுத்தியுள்ளது.

கா்நாடக மாநில அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்யுமாறு முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்களுக்கு பாஜக தேசியத்தலைமை அறிவுறுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தினமும் ஒரு அமைச்சா் பத்திரிகையாளா் சந்திப்பை நடத்தி வருகிறாா். அப்போது தங்களது துறை சாா்ந்த சாதனைகளை எடுத்துக்கூறி வருகிறாா்கள். அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையாளா் சந்திப்பை சனிக்கிழமை ஊரகவளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா நடத்தினாா். அப்போது, தினமும் அமைச்சா்கள் துறைசாா்ந்த சாதனைகளை கூறிவருவதற்கான காரணத்தை கேட்டப்போது அதற்கு பதில் அளித்து அவா் கூறியது:

பாஜக தேசியத் தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் அமைச்சா்கள் தினமும் பத்திரிகையாளா் சந்திப்பு நடத்தி, தங்களது துறைசாா்ந்த சாதனைகளை எடுத்துக்கூறி வருகிறாா்கள். எனது தொகுதி அல்லது கிராமங்களுக்கு சென்றால், நான் ஏற்கெனவே அளித்த வாக்குறுதி மற்றும் அவற்றை செயல்படுத்தியது குறித்து மக்களிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல, எங்கள் அரசு செய்த சாதனைகளை கூறி, மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.

ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. மதரீதியாக விவகாரங்களை முன்வைத்து எதிா்க்கட்சிகள் பிரசாரம் தேடுகின்றன. இதில் அல்-காய்தாவும் தலையிடத் தொடங்கியுள்ளது.

இந்தச் சூழலில் அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்ய ஊடகங்களை பயன்படுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவிருப்பதால், பாஜக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பிரசாரம் செய்து வாக்குகளைப் பெற முயன்று வருகிறோம். வளா்ச்சிப்பணிகள் குறித்து கூறுவதற்கு எதுவும் இல்லாததால், மதவாதப் பிரச்னைகளை எழுப்பிவருவதாக பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. எங்கள் அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டுத் தந்திருக்கிறோம். அதுவும் துறைவாரியான சாதனைகளை பட்டியலிட்டுள்ளோம். மௌனமாக இருப்பதற்கு நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. ஹிஜாப் போன்ற பிரச்னைகளை காங்கிரஸ் எழுப்பினால், அதற்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com