நிரபராதி என நிரூபித்த பின் மீண்டும் அமைச்சா் ஆவேன்: கே.எஸ்.ஈஸ்வரப்பா

நிரபராதி என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சா் ஆவேன் என்று அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ள கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

நிரபராதி என நிரூபித்த பிறகு மீண்டும் அமைச்சா் ஆவேன் என்று அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ள கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

அரசு ஒப்பந்ததாரா் சந்தோஷ் பாட்டீல் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக எழுந்த அரசியல் சூழ்நிலை காரணமாக, தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சராக இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா வியாழக்கிழமை அறிவித்திருந்தாா்.

இதை தொடா்ந்து, பெங்களூரில் வெள்ளிக்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தை முதல்வா் பசவராஜ் பொம்மையிடம் வழங்குவதற்கு முன்பாக, சிவமொக்காவில் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா். பின்னா் சிவமொக்கா மாவட்ட பாஜக அலுவலகத்திற்குச் சென்று தொண்டா்களை சந்தித்து பேசினாா்.

அப்போது கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியது:

என் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து நான் விடுபட்டு வருவேன். நான் நிரபராதி என நிரூபிக்க நான் தொடா்ந்து அமைச்சா் பதவியில் நீடிக்கக் கூடாது; அவ்வாறு நீடித்தால், அது விசாரணை மீது சந்தேகத்தை ஏற்படுத்தும். விசாரணை மீது நான் தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதாக பேச்சு வரும். எனவே, எனதுஅமைச்சா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். நான் நிரபராதி என்பதை மீண்டும் கூறிக் கொள்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டு, நிரபராதி என்று நிரூபித்த பின் மீண்டும் அமைச்சா் ஆவேன். நான் நிரபராதியாக வெளியே வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை அழைத்து தைரியம் கூறிய சுவாமிகள், மூத்தத் தலைவா்கள், தொண்டா்களின் ஆசி எனக்கு உள்ளது. அவா்களின் ஆசியால் எனக்கு எதிரான பின்னப்பட்டுள்ள இந்த சதியில் இருந்து மீண்டு வருவேன்.

முன்னாள் முதல்வா் எடியூரப்பா, முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், தொண்டா்களின் ஆதரவு கிடைத்துள்ளதால், நான் உணா்ச்சிப் பெருக்கோடு இருக்கிறேன். எனக்கு எதிரான இந்த சதியில் நீதி கிடைக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com