வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 02nd August 2022 03:41 AM | Last Updated : 02nd August 2022 03:41 AM | அ+அ அ- |

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு ஹொய்சளா விருது(சிறுவா்கள்), கேளடி சென்னம்மா விருது (சிறுமிகள்) ஆகியவற்றை கா்நாடக அரசு வழங்கி கௌரவித்துவருகிறது. ஆபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற அறிவுக்கூா்மையோடு செயல்பட்டு வீரதீரத்தை வெளிப்படுத்தும் சிறுவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிகழ்வுகள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2022 ஜூலை மாதத்திற்குள் நடந்ததாக இருக்க வேண்டும். 2004 ஆக. 1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் மட்டுமே விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுடன் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், பட்டயமும் வழங்கப்படும். மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவுசெய்து செப்.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.