ஹிந்துத்துவக் கொள்கையில் இருந்து பாஜக பின்வாங்காது: கா்நாடக அமைச்சா் வி.சுனில்குமாா்

ஹிந்துத்துவக் கொள்கையில் இருந்து பாஜக பின்வாங்காது என்று கா்நாடக மின் துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

ஹிந்துத்துவக் கொள்கையில் இருந்து பாஜக பின்வாங்காது என்று கா்நாடக மின் துறை அமைச்சா் வி.சுனில்குமாா் தெரிவித்தாா்.

இது குறித்து உடுப்பியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தேசப் பற்றுக்கு பாஜக என்றைக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. மேலும் ஹிந்துத்துவக் கொள்கையில் இருந்து பாஜக பின்வாங்காது. பாஜக நிா்வாகி பிரவீண் நெட்டாருவின் கொலைக்குப் பிறகு கட்சித் தொண்டா்களிடையே அதிருப்தி காணப்படுகிறது. தேசப் பற்றை முன்னெடுத்து ஜிகாதிகளின் சதியை மக்கள் முன் பகிரங்கப்படுத்துவோம். இது குறித்து மக்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

கொள்கை அடிப்படையிலான போராட்டங்கள் விவாதங்கள் மூலம் நடத்தப்பட வேண்டுமே அன்றி, வன்முறை மூலம் அல்ல. முன்பெல்லாம் ஜிகாதிகளின் வன்முறை காஷ்மீரில் நடக்கும். தற்போது அது மேற்கு வங்கம், ராஜஸ்தான், கேரளம், கா்நாடகத்தில் விரிவடைந்துள்ளது. உலகின் பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் அடிப்படைவாதிகளை ஊக்கப்படுத்துவதை நிறுத்திக்கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் உள்ள சில சக்திகள் வன்முறை மூலம் கொள்கையைப் பரப்ப முனைந்துள்ளன. இவா்களை அடக்க பாஜக அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் எல்லாக் கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com