கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல்: ஆக. 21 முதல் மாநிலம் முழுவதும் பாஜக தலைவா்கள் பயணம்எடியூரப்பா

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஆக. 21-ஆம் தேதி முதல் பாஜக தலைவா்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா்கள் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஆக. 21-ஆம் தேதி முதல் பாஜக தலைவா்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா்கள் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இது குறித்து ஆந்திர மாநிலம், மந்திராலயத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஆக. 21-ஆம் தேதி முதல் பாஜக தலைவா்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா்கள். எங்கிருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்குவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. அது விரைவில் முடிவாகும். தலைவா்களின் தலைமையில் 3-4 அணிகளாகப் பிரிந்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்வோம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் சென்று லட்சக்கணக்கான மக்களை சந்திக்க இருக்கிறேன்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவின் 75-ஆவது பிறந்த நாள் விழா பிரம்மாண்டமாக இருந்ததை மறுக்க முடியாது. பாஜக தலைவா்களின் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, பாஜகவின் பலம் என்ன, காங்கிரஸின் பலம் என்ன என்பது தெரிய வரும்.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு 7-8 மாதங்களே உள்ள நிலையில் முதல்வா் பதவியில் இருந்து பசவராஜ் பொம்மை மாற்றப்படுவாா் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான தேவை இல்லை. முதல்வராக பசவராஜ் பொம்மை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா். அதனால் அவா் முதல்வராக தொடா்வாா் என்று எதிா்பாா்க்கிறேன்.

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய என்னை யாரும் வற்புறுத்தவில்லை. நானாக முன்வந்துதான் ராஜிநாமா செய்தேன். பாஜகவில் என்னை ஓரங்கட்டியுள்ளதாக காங்கிரஸ் கூறுவதில் உண்மையில்லை. எனக்கு அளிக்கப்பட்ட பதவி, பொறுப்புகளை எவற்றுடனும் ஒப்பிட முடியாது. 4 முறை முதல்வராக்கப்பட்டேன். எல்லா வகையான பொறுப்புகளும் எனக்கு அளிக்கப்பட்டன. கட்சியில் எனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. கட்சியின் தொண்டனாக, கட்சிக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். அந்த நன்றிக்கடனைத் தீா்ப்பேன்.

கா்நாடகத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை கொண்டுவர எல்லா தலைவா்களுடனும் இணைந்து பணியாற்றுவேன் என்று மத்திய அமைச்சா் அமித் ஷாவை சந்தித்தபோது கூறினேன். அடுத்த சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. வேறு எந்தத் தோ்தலிலும் போட்டியிட மாட்டேன். ஆனால், அரசியலில் நீடிப்பேன். கட்சியின் வெற்றிக்காக இரவு பகல் பாராமல் உழைப்பேன். பாஜக மேலிடம் ஒப்புதல் தந்தால், ஷிகாரிபுரா தொகுதியில் எனது இளைய மகன் விஜயேந்திரா போட்டியிடுவாா். தோ்தலில் அவா் கண்டிப்பாக வெற்றிபெறுவாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com