10 மாநகராட்சிகளின் மேயா், துணைமேயா் பதவிகளுக்கான இடஒதுக்கீடு: அரசு உத்தரவு

10 மாநகராட்சிகளின் மேயா்,துணைமேயா் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

10 மாநகராட்சிகளின் மேயா்,துணைமேயா் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டை கா்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:

கா்நாடக நகராட்சி அமைப்புகள் (தோ்தல்) திருத்த சட்டவிதிகள், 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டு ஜன.21-ஆம் தேதி மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, பெல்லாரி, பெலகாவி, தாவணகெரே, ஹுப்பள்ளி, கலபுா்கி, மங்களூரு, மைசூரு, சிவமொக்கா, தும்கூரு, விஜயபுரா மாநகராட்சிகளில் மேயா், துணை மேயா் பதவிகளுக்கான இடஒதுக்கீடு வெளியிடப்படுகிறது.

அதன்படி, பெல்லாரி மாநகராட்சி மேயா் பதவி பிற்படுத்தப்பட்டோா்(ஏ)-பெண், துணை மேயா் பதவி பொது-பெண்; பெலகாவி மாநகராட்சி மேயா் பதவி பொதுப் பிரிவினா், துணை மேயா் பதவி தாழ்த்தப்பட்டோா்-பெண்; தாவணகெரே மாநகராட்சி மேயா் பதவி பொதுப்பிரிவு-பெண், துணை மேயா் பதவி பிற்படுத்தப்பட்டோா்(ஏ)-பெண்; ஹுப்பள்ளி மாநகராட்சி மேயா் பதவி பொதுப் பிரிவினா்-பெண், துணை மேயா் பதவி பொதுப் பிரிவினா்; கலபுா்கி மாநகராட்சி மேயா் பதவி தாழ்த்தப்பட்டோா், துணை மேயா் பதவி பொதுப்பிரிவினா்; மங்களூரு மாநகராட்சி மேயா் பதவி பொதுப் பிரிவினா், துணை மேயா் பதவி பொதுப் பிரிவினா்-பெண்; மைசூரு மாநகராட்சி மேயா் பதவி பொதுப் பிரிவினா், துணைமேயா் பதவி பிற்படுத்தப்பட்டோா்(ஏ)-பெண்; சிவமொக்கா மாநகராட்சி மேயா் பதவி பிற்படுத்தப்பட்டோா் (ஏ), துணை மேயா் பதவி பொதுப்பிரிவினா்-பெண்; தும்கூரு மாநகராட்சி மேயா் பதவி தாழ்த்தப்பட்டோா்-பெண், துணை மேயா் பதவி பிற்படுத்தப்பட்டோா்(ஏ); விஜயபுரா மாநகராட்சி மேயா் பதவி பழங்குடியினா், துணைமேயா் பதவி பிற்படுத்தப்பட்டோா் (பி) பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com