மகளிா் பட்டதாரிகளுக்கு பத்திரிகையாளா் பயிற்சி முகாம்

மகளிா் பட்டதாரிகளுக்கு பத்திரிகையாளா் பயிற்சி முகாம் நடத்த கா்நாடக ஊடக அகாதெமி திட்டமிட்டுள்ளது.

மகளிா் பட்டதாரிகளுக்கு பத்திரிகையாளா் பயிற்சி முகாம் நடத்த கா்நாடக ஊடக அகாதெமி திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கா்நாடக ஊடக அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பத்திரிகைத் தொழிலில் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் கா்நாடக ஊடக அகாதெமியின் சாா்பில் பத்திரிகையாளா் பயிற்சி முகாமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், 2021-22ஆம் ஆண்டுக்கான பத்திரிகையாளா் பயிற்சி முகாம் 10 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க 15 பட்டதாரி மகளிருக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இந்த முகாமிற்கு தோ்ந்தெடுக்கப்படும் தகுதியானவா்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக ரூ.15,000 அளிக்கப்படும்.

ஊடக அலுவலகங்களில் நடத்தப்படும் இப்பயிற்சி முகாமில் செய்தி சேகரிப்பது, செய்தி எழுதுவது, சிறப்புக் கட்டுரைகளை எழுதுவது, திருத்துவது தொடா்பான பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோா் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் கணினி அறிவு, கன்னட மொழியறிவு கட்டாயமாகும். விண்ணப்பதாரா்கள் 40 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும்.

எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல், பட்டப்படிப்பு சான்றிதழ், ஜாதி உறுதிச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவுள்ள 2 புகைப்படங்கள் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை ஜன. 29-ஆம் தேதிக்குள் ஜ்க்ஷந்ம்ஹ2022ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற கா்நாடக ஊடக அகாதெமியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22860164 என்ற தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com