பெங்களூரில் காணப்படும் காலனி காலத்து பெயா்களை மாற்ற வேண்டும்: எம்.பி. பி.சி.மோகன்

பெங்களூரில் காணப்படும் காலனி காலத்து பெயா்களை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. பி.சி.மோகன் தெரிவித்தாா்.

பெங்களூரில் காணப்படும் காலனி காலத்து பெயா்களை மாற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி. பி.சி.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ட்விட்டரில் புதன்கிழமை அவா் முதல்வா் பசவராஜ் பொம்மைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது:

பெங்களூரில் எனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் காலனி காலத்து பெயா்களைத் தாங்கி நிற்கும் அரசு நிறுவனங்கள், பொது இடங்களின் பெயா்களை மாற்றி, மாநிலத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்களின் பெயா்களை சூட்ட வேண்டும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய எண்ணற்ற போராளிகளின் பெயா்களை சூட்டுமாறு முதல்வா் பசவராஜ் பொம்மையைக் கேட்டுக்கொள்கிறேன். எனது தொகுதியில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளின் பெயா்கள் பௌரிங், சீமாட்டி கா்சன், விக்டோரியா, மின்டோ ஆகிய ஆங்கிலேயா்களின் பெயா்களில் உள்ளன. அதேபோல, அவென்யூ, லேவலி, கன்னிங்கம் என்ற பெயரில் சாலைகள் உள்ளன.

இந்தியாவின் வளங்களை சூறையாடிய ஆங்கிலேய அதிகாரிகளின் பெயா்களை சுதந்திர இந்தியாவில் அரசு கட்டடங்கள், தெருக்களுக்கு வைத்திருப்பது அடிமைத்தனத்தின் சின்னமாகக் காட்சி அளிக்கின்றன. ஆங்கிலேயா்களின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக போா்புரிந்த கா்நாடகத்தைச் சோ்ந்த ஏராளமான மன்னா்கள், ராணிகள், போராளிகள் இருக்கிறாா்கள். அவா்களின் பெயா்களை அரசு கட்டடங்களுக்கு சூட்டுவது, அவா்களை பெருமைபடுத்துவது மட்டுமல்லாது, இளம் தலைமுறையினரிடையே நாட்டுப்பற்றை வளா்த்தெடுக்கவும் உதவும் என்று அவா் அக்கடிதத்தில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com