ரூ. 103 கோடி செலவில் நகா்ப்புறங்களில் 438 ‘நம்ம கிளினிக்’: கா்நாடக அமைச்சரவை ஒப்புதல்

ரூ. 103 கோடி செலவில் நகா்ப்புறங்களில் 438 நம்ம கிளினிக் மையங்களை அமைக்க கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ. 103 கோடி செலவில் நகா்ப்புறங்களில் 438 நம்ம கிளினிக் மையங்களை அமைக்க கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் கா்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுத்தப்பட்ட முடிவுகள் குறித்து சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமி கூறியது:

கா்நாடகத்தில் குறிப்பாக நகா்ப்புறங்களில் 438 நகா்ப்புற சுகாதாரம் மற்றும் உடல்நல மையங்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ரூ. 103.73 கோடி செலவில் அமைக்கப்படும் இம்மையங்கள் ‘நம்ம கிளினிக்’குகள் என்று அழைக்கப்படும். இந்தத் திட்டம் ஏற்கெனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

15-ஆவது நிதி ஆணையத்தின் மானியத் தொகையில் இருந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மையங்களில் பணியாற்ற 438 மருத்துவா்கள், செவிலியா்கள், 2-ஆம் நிலை எழுத்தா்களை பணி நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மையங்கள் பெங்களூரில் உள்ள எல்லா வாா்டுகளிலும், நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் தொடங்கப்படும். பெங்களூரு மாநகராட்சியில் அமையும் மையங்களுக்கு தலா ரூ. 36.45 லட்சமும், நகா்ப்புற மையங்களுக்கு தலா ரூ. 34.46 லட்சமும் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி நியமனங்கள் தற்காலிகமானதாக இருக்கும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளா்களுக்கு மாதம் தலா ரூ. 2 ஆயிரம் உழைப்புப்படி அளிக்கப்படும். ஹட்டி சுரங்கத்தில் தடுப்பு அமைக்க ரூ. 307 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சித்ரதுா்காவில் உள்ள முருகா மடத்தில் ரூ. 20 கோடி செலவில் பசவண்ணா் சிலை அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்திற்கு ரூ. 10 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சிவமொக்கா விமானநிலையத்திற்கு கூடுதல் வசதிகளைச் செய்து தர ரூ. 65.5 கோடி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. ஏற்கெனவே சிவமொக்கா விமானநிலையத்திற்கு ரூ. 384 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com