ஆக.1 முதல் அடுமனை பயிற்சி முகாம்

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் 4 வாரகால அடுமனை பயிற்சி முகாம் ஆக. 1-ஆம் தேதி தொடங்குகிறது.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் 4 வாரகால அடுமனை பயிற்சி முகாம் ஆக. 1-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சாா்பில் 4 வாரங்களுக்கு அடுமனை பயிற்சிமுகாம் மற்றும் ஓராண்டு அடுமனை தொழில்நுட்ப பட்டயப் பயிற்சி வகுப்புகள் நடக்கவிருக்கிறது. அக்.1-ஆம் தேதி தொடங்கும் அடுமனை பயிற்சி முகாமில் பங்கேற்போா் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வரலாம். இந்த பயிற்சியின் போது பிரெட், பன், பப்ஸ், கேக்கள், பிஸ்கட்கள், ரோல்ஸ் தயாரிக்க கற்றுத்தரப்படும்.

அடுமனை பட்டயப் பயிற்சியில் அடுமனை தொழில்நுட்பம் குறித்த முழு தகவல்களும் பகிரப்படும். பட்டயப்

பயிற்சியில் சோ்ந்து பயில குறைந்தது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அடுமனை பயிற்சிமுகாம் மற்றும் பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை ஒருங்கிணைப்பாளா், அடுமனை பயிற்சிப் பிரிவு, வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஹெப்பாள், பெங்களூரு-24 என்றமுகவரியில் ரூ. 10 செலுத்தி ஒப்படைக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080- 23513370 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com