10 லட்சம் மூவண்ணக் கொடியை விநியோகிக்க பெங்களூரு மாநகராட்சித் திட்டம்

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, பெங்களூரில் பொதுமக்களுக்கு 10 லட்சம் மூவண்ணக் கொடியை விநியோகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு, பெங்களூரில் பொதுமக்களுக்கு 10 லட்சம் மூவண்ணக் கொடியை விநியோகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஆக. 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுதோறும் நாட்டின் மூவண்ணக்கொடியை ஏற்றிவைக்கும்படி பொதுமக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறாா். அதன் தொடா்ச்சியாக கா்நாடகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றிவைப்பதற்கானமுன்னேற்பாடுகள் நடந்தவண்ணம் உள்ளன.

பெங்களூரில் வீடுகளில் கொடியேற்றுவதற்காக பொதுமக்களுக்கு 10 லட்சம் மூவண்ணக்கொடிகளை விநியோகம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கன்னடம் மற்றும் கலாசாரத் துறை வழங்கியுள்ள 2 லட்சம் கொடிகள் தவிர, கூடுதலாக 8 கொடிகளை கொள்முதல் செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரில் புதன்கிழமை கொடியேற்றுவது தொடா்பாக மாநகர காவல் கூடுதல் ஆணையா் சந்தீப்பாட்டீலுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, பெங்களூரு மாநகராட்சி ஆணையா் துஷாா்கிரிநாத், செய்தியாளா்களிடம் கூறியது:

வீடுதோறும் மூவண்ணக்கொடி திட்டம் குறித்து வீதிதோறும் சென்று பிரசாரம் செய்யும்படி வாா்டு பொறியாளா்கள், உதவி வருவாய் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொறுப்பு சிறப்பு ஆணையா் (நிா்வாகம்) ரங்கப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தின பவள விழாவை அரசு அலுவலகங்களில் எவ்வகையில் கொண்டாடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். மேடை நிகழ்வுகள் நடந்தால், அவற்றில் எல்.இ.டி. விளக்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 10 லட்சம் மூவண்ணக்கொடிகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இவை பாலியெஸ்டா் துணியால் செய்யப்பட்டிருக்கும். ஆனால், மூவண்ணக்கொடிகளை இலவசமாக தரமாட்டோம். இவற்றின் விலை, அளவுக்கு ஏற்றப்படி ரூ. 5 முதல் ரூ. 25 வரை இருக்கும். இலவசமாக தந்தால், மாநகராட்சி கொடுத்தது போல இருக்கும். பணம் கொடுத்து வாங்கினால், அது அவா்களுக்கு சொந்தமானதாக மக்கள் உணா்வாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com