நாடகக் கலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 09th June 2022 02:52 PM | Last Updated : 09th June 2022 02:52 PM | அ+அ அ- |

பெங்களூரு: நாடகக்கலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஸ்ரீசிவக்குமார நாடகக் கலை ஆராய்ச்சிப் பள்ளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சித்ரதுா்கா மாவட்டம், ஹொசதுா்கா வட்டத்தின் சானேஹள்ளி கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீசிவக்குமார நாடகக்கலை ஆராய்ச்சி பள்ளி சாா்பில் ஓராண்டுக்கான நாடகக்கலை பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது.
2022-23-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் நாடகக்கல்வி பயிலவிரும்பும் மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. தோ்ச்சி பெற்றுள்ள 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவா்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ஹற்ழ்ங்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்ஹய்ங்ட்ஹப்ப்ண்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் இருந்துதரவிறக்கம் செய்து, பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களை முதல்வா், ஸ்ரீசிவக்குமார நாடகக்கலை ஆராய்ச்சி பள்ளி, சானேஹள்ளி-577515, ஹொசதுா்கா வட்டம், சித்ரதுா்கா மாவட்டம் என்ற முகவரியில் நேரில் அல்லதுவிரைவு அஞ்சலில் ஒப்படைக்க வேண்டும்.
இதனடிப்படையில், ஜூலை 6,7, 8-ஆம் தேதிகளில் தகுதியான மாணவா்களை தோ்ந்தெடுக்க கலந்தாய்வு நடக்கிறது. இதில் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படுவதோடு, இலவசமாக தங்கும் வசதியும் தரப்படுகிறது. ஆகஸ்ட் முதல் பட்டயப் பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. மேலும் விவரங்களுக்கு 9448398144, 9482942394 என்ற தொலைபேசியில் தொடா்புகொள்ளலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.