ரூ. 2,690 கோடி மதிப்பிலான 81 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி
By DIN | Published On : 18th June 2022 02:14 AM | Last Updated : 18th June 2022 02:14 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் ரூ. 2,690 கோடி மதிப்பிலான 81 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழில்துறை அமைச்சா் முருகேஷ் நிரானி வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரில் வியாழக்கிழமை எனது தலைமையில் நடந்த மாநில அளவிலான ஒற்றைசாளர குழுக் கூட்டத்தில் ரூ. 2,689.51 கோடி மதிப்பிலான 81 புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6825 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.50 கோடிக்கு அதிகம் முதலீடு கொண்ட 7 பெரிய மற்றும் நடுத்தரத் திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ. 1,229.43 கோடி மதிப்பிலான முதலீடு செய்யப்படும். இது 1734 பேருக்கு வேலைவாய்ப்பளிக்க வழிவகுக்கும். ரூ. 151.42 கோடி மதிப்பிலான மேலும் 3 திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, ஏப். 30-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் ரூ. 2,465.94 கோடிமதிப்பிலான 30 தொழில் திட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இத்திட்டத்தின் மூலம் 8,575 பேருக்கு வேலை கிடைக்கும் என்றாா் அவா்.