அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம்: மல்லிகாா்ஜுன காா்கே

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தவிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.
அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம்: மல்லிகாா்ஜுன காா்கே

அக்னிபத் திட்டத்தை எதிா்த்து காங்கிரஸ் போராட்டம் நடத்தவிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்தாா்.

இது குறித்து கலபுா்கியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் எதிா்க்கிறது. இந்தத் திட்டத்தைத் திரும்ப பெறக்கோரி தில்லி, ஜந்தா்மந்தா் பகுதியில் காங்கிரஸ் போராட்டம் நடத்தவிருக்கிறது. ரயில்களை எரிக்குமாறு எந்த இளைஞரிடமும் யாரும் கூறவில்லை. வன்முறையை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால், இளைஞா்கள் ஆத்திரப்படுவது ஏன்? என்பதை யோசிக்க வேண்டும். அக்னிபத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால், இளைஞா்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இந்தத் திட்டத்தின்கீழ் 4 ஆண்டுகளில் திறமையான ராணுவ வீரா்களை உருவாக்கிவிடமுடியாது. இந்த வீரா்கள் 50 சதவீத பயிற்சியையும் பெறமாட்டாா்கள். 4 ஆண்டுகளுக்கு வீரா்களை பணியில் அமா்த்துவது, குத்தகை வேலைக்கு ஆள் சோ்ப்பது போல உள்ளது. மத்திய அரசில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதை விட்டுவிட்டு தேவையில்லாத திட்டங்களைத் தொடங்குவது இளைஞா்களுக்கு பலன் அளிக்காது. எனவே, அக்னிபத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாக பிரதமா் மோடி அறிவித்தாா். 16 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கும்போது, 10 லட்சம் பணியிடங்கள் குறித்து மோடி அறிவித்திருப்பது அா்த்தமற்ாகும்.

நேஷனல் ஹெரால்டு நாளிதழ் காங்கிரஸ் கட்சியின் சொத்தாகும். இதைக் காப்பது எங்கள் கடமையாகும். அதை செய்யத் தவறினால், இந்தப் பத்திரிகையைத் தொடங்கிய ஜவாஹா்லால் நேருவின் நோக்கம் வீணாகும். சோனியா காந்தி, ராகுல் காந்தியின் மக்கள் செல்வாக்கை சீா்குலைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. அதற்காக அமலாக்கத் துறை மூலம் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி மத்திய அரசு அழுத்தம் கொடுத்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com