ஜூலை 1 முதல் துப்புரவுத் தொழிலாளா் மாநிலம் தழுவிய போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய போராட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் நடத்த துப்புரவுத் தொழிலாளா்கள்திட்டமிட்டுள்ளனா்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி மாநிலம் தழுவிய போராட்டத்தை ஜூலை 1-ஆம் தேதி முதல் நடத்த துப்புரவுத் தொழிலாளா்கள்திட்டமிட்டுள்ளனா்.

இது குறித்து பெங்களூரில் கா்நாடக மாநில மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து துப்புரவுத்தொழிலாளா் சங்கத்தலைவா் சிவண்ணா மைசூரு, செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

கா்நாடகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் 11,800 பேரை பணி நியமனம் செய்தனா். ஆனால், இன்னும் 42 ஆயிரம் போ் லோடா்கள், கிளீனா்கள், ஓட்டுநா்கள், துப்புரவுத் தொழிலாளா்களை நிரந்தரப் பணியாளா்களாக்க உத்தரவிட வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா்கள் அலுவலகம், பெங்களூரில் சுதந்திரப் பூங்காவில் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். சுதந்திரப் பூங்காவில் 15 ஆயிரம் துப்புரவுத் தொழிலாளா்கள் திரண்டு போராட்டம் நடத்துவாா்கள். அன்று முதல் குப்பைகளை துப்புரவுத் தொழிலாளா்கள் அகற்ற மாட்டாா்கள். பெங்களூரில் 3 நாட்களுக்கு குப்பைகளை அள்ளாவிட்டால் 5800 டன் குப்பை சேரும். அதன்பிறகு குப்பைகளால் பெங்களூரு நாற்றமெடுக்கும். இதற்கு மாநில அரசு தான் பொறுப்பு. அண்மையில் முதல்வா் பசவராஜ் பொம்மையைச் சந்தித்து எங்கள் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com