முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
10 மாத தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th March 2022 11:23 PM | Last Updated : 14th March 2022 11:23 PM | அ+அ அ- |

10 மாத தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து தோட்டக் கலைத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தோட்டக்கலைத்துறை சாா்பில் பெங்களூரு, லால்பாக் பூங்காவில் உள்ள தோட்டக்கலை பயிற்சி மையத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான 10 மாத தோட்டக்கலை பயிற்சி மே 2 முதல் 2023-ஆம் ஆண்டு பிப்.28-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. இந்த பயிற்சியில் பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், ராமநகரம், தும்கூரு, கோலாா், சிக்பளாப்பூா் மாவட்ட மாணவா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
கன்னடத்தை ஒருபாடமாகக் கொண்டு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றுள்ள 18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்ட மாணவா்களிடமிருந்து பயிற்சியில் சோ்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவா்களின் பெற்றோா்களிடம் கட்டாயம் நிலம் இருக்க வேண்டும். இதற்கான பட்டா ஆவண நகலையும் சமா்ப்பிக்க வேண்டும்.
பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், தும்கூரு, ராமநகா், சிக்பளாப்பூா், கோலாா், தென்கன்னடம், குடகு, மண்டியா, ஹசன், சாமராஜ்நகா், மைசூரு மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா்களிடம் விண்ணப்பங்களை பெற்று, அங்கேயே அளிக்கலாம். இதுதவிர, ஏப்.16-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்தும் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். நோ்காணல் மூலம் தகுதியானவா்கள் பயிற்சிக்குத் தோ்வுசெய்யப்படுவாா்கள். தோ்வாகும் பயிற்சியாளருக்கு மாத கல்வி உதவியாக ரூ.1250 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 080 - 26564538 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.