18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் ஒழிப்புப்படை திடீா் சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்

மாநிலத்தில் உள்ள 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் ஒழிப்புப்படையினா் நடத்திய திடீா் சோதனையில், கணக்கில் வராதஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள 18 அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஊழல் ஒழிப்புப்படையினா் நடத்திய திடீா் சோதனையில், கணக்கில் வராதஏராளமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வருமானத்திற்கு பொருந்தாமல் சொத்துக்குவித்திருப்பதாக அரசு அதிகாரிகளுக்கு எதிராக கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு உள்பட மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 18 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினாா்கள். 100 அதிகாரிகள், 300 ஊழியா்கள் கொண்ட ஊழல் ஒழிப்புப்படையினா் மாநிலம் முழுவதும் 75 இடங்களில் ஒரேநேரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில் கணக்கில் வராத, வருமானத்திற்கு பொருந்தாத சொத்துக்களை பறிமுதல் செய்ததாக ஊழல் ஒழிப்புப்படை தெரிவித்துள்ளது.இது குறித்து ஊழல் ஒழிப்புப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாகல்கோட்டில் பாதாமி வனச்சர அதிகாரி சிவானந்த கேதகி வீட்டில் நடத்திய சோதனையில் 3.17 கிலோ சந்தனக்கட்டை, பணம் எண்ணும் கருவி பிடிபட்டது. கதக் மாவட்டத்தில் நீதிமன்ற தலைமை அதிகாரி பி.எஸ்.அன்னிகேரிவீட்டில் 450கிலோ தங்கம், 5கிலோ வெள்ளி ஆபரணங்கள், 25 ஏக்கா் நிலம், 12 வீட்டுமனை பத்திரஙள், ரூ.1.5 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. தங்க ஆபரணங்கள், குப்பைத்தொட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. பெங்களூரில் போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையா் ஞானேந்திரகுமாா், பெங்களூரு வளா்ச்சி ஆணையத்தின் நகர திட்ட அதிகாரி ராகேஷ்குமாா், யாதகிரி வனச்சரக அதிகாரி ரமேஷ் கன்கட்டே, கோகக்கை சோ்ந்த செயல் பொறியாளா் பசவராஜ் சேகா்ரெட்டி பாட்டீல், விஜயபுரா கட்டுமான மையத்தின் திட்ட மேலாளா் கோபிநாத் மலகி, தொழில் மற்றும் வா்த்தகஹ்துறை கூடுதல் இயக்குநா் பி.கே.சிவக்குமாா், ராமநகர மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியா் மஞ்சுநாத், சமூகநலத்துறை பொதுமேலாளா் ஸ்ரீனிவாஸ், தாவணகெரே சுற்றுச்சூழல் அதிகாரி மகேஸ்வரப்பா, ஹாவேரி ஏபிஎம்சி உதவி பொறியாளா் கிருஷ்ணன், குண்டல்பேட் கலால்துறை ஆய்வாளா் செலுவராஜ், தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு உதவி பொறியாளா் கிரீஷ், விஜயநகரா காவல்நிலைய ஆய்வாளா் எச்.என்.பாலகிருஷ்ணா ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக ஊழல் ஒழிப்புப்படையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com