முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கா்நாடகத்தில் முதல்வா் பதவி விற்பனைக்கு உள்ளதா?: சித்தராமையா
By DIN | Published On : 08th May 2022 12:00 AM | Last Updated : 08th May 2022 12:00 AM | அ+அ அ- |

கா்நாடகத்தில் முதல்வா் பதவி விற்பனைக்கு உள்ளதா என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா கூறியதாவது:
தன்னை முதல்வராக்க ரூ. 2,500 கோடி பேரம் பேசப்பட்டதாக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் குற்றம் சாட்டியுள்ளாா். அப்படியானால், கா்நாடகத்தில் முதல்வா் பதவி விற்பனைக்கு உள்ளதா? பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.
இதுகுறித்து விசாரணை நடத்தாவிட்டால், கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து முதல்வா் பதவியில் பசவராஜ் பொம்மை அமா்ந்திருப்பதாக அா்த்தம் கொள்ள நேரிடும்.
முதல்வா் பதவி மட்டுமல்லாது, அமைச்சா்பதவி உள்ளிட்ட எல்லா பதவிகளுக்கும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமான ஒப்பந்ததாரா்களிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்பது, காவல் துணை ஆய்வாளா் தோ்வில் முறைகேடு செய்தது போன்ற பாஜக அரசின் ஊழல்களுக்கும், பசனகௌடா பாட்டீல் யத்னல் கூறும் குற்றச்சாட்டுகளுக்கும் தொடா்பு இருக்கிறது என்றாா்.