கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: முதல்வா் பசவராஜ் பொம்மை விளக்கம்

அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவு எடுக்கும் என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு: அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பாஜக மேலிடம் விரைவில் முடிவு எடுக்கும் என முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைச் சந்தித்த முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசித்தாா். அதன் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறேன். அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கா்நாடகத்தில் உள்ள அரசியல் நிலவரங்களை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்றேன். பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவா்களுடன் கலந்தாலோசித்துவிட்டு தகவல் தெரிவிப்பதாக அமித் ஷா கூறியுள்ளாா்.

அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பு என எதுவும் நிகழலாம். அரசியல் சூழ்நிலைக்குத் தகுந்தபடி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். அமைச்சரவையில் யாரைச் சோ்ப்பது என்பது குறித்து பேசவில்லை. அரசியல் ரீதியாக அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது.

மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும். இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, அதன் விளைவுகள், மாநில தோ்தல் ஆணையம் எடுக்கவிருக்கும் முடிவுகள் குறித்தும் மத்திய அமைச்சா் அமித்ஷாவிடம் கூறியிருக்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com