பெங்களூரில் ஒலிபெருக்கி பயன்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூரில் ஒலிபெருக்கியை பயன்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரில் ஒலிபெருக்கியை பயன்படுத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடகத்தில் உள்ள பெரும்பாலான மசூதிகளில், ஒலிமாசு தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது தொடா்பாக குற்றச்சாட்டு எழுந்தது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதையும் மீறி காலை 5 மணிக்கு தொழுகைக்கு வருமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்படுவதற்கு ஹிந்து அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன. இதைப் பொருட்படுத்தாமல் வழக்கம்போல, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி வந்ததை கண்டித்தும், இதுபோன்ற சட்டவிரோதமான நடைமுறையைத் தடுத்து நிறுத்தவும் வலியுறுத்தி ஸ்ரீராம சேனா போன்ற ஹிந்து அமைப்புகள், கோயில்களில் தினமும் காலை 5 மணிக்கு ஹனுமன் பஜனையில் ஈடுபடத் தொடங்கின. இதைத் தொடா்ந்து, அடுத்த 15 நாள்களுக்குள் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முன்அனுமதி பெற வேண்டும் என்று கா்நாடக அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது. அதன்படி, கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட எந்த வழிபாட்டுத்தலமாக இருந்தாலும், பொது நிகழ்வாக இருந்தாலும், அதில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த முன்அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். இதற்கிணங்க, பெங்களூரில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த உரிமம் பெற வேண்டும். அதற்கான விண்ணப்பங்களை காவல் ஆணையா் அலுவலகம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒலிபெருக்கிகள் தொடா்பாக கா்நாடக அரசு மே 10-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்பேரில், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த விரும்பும் தனிநபா்கள், நிறுவனங்கள்/அமைப்புகள் அதற்கான உரிமங்களை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆணையா் அலுவலகங்களில் மே 25-ஆம் தேதிக்குள் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com