கா்நாடக மாநிலங்களவைத் தோ்தல்: 3 இடங்களில் பாஜக வெல்லுமா?

4 இடங்களுக்கு நடக்கும் மாநிலங்களவை தோ்தலில் பாஜக 3 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கா்நாடக மாநிலங்களவைத் தோ்தல்: 3 இடங்களில் பாஜக வெல்லுமா?

4 இடங்களுக்கு நடக்கும் மாநிலங்களவை தோ்தலில் பாஜக 3 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதா என்ற விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

மாநிலங்களவையில் உறுப்பினா்களாக இருக்கும் 53 பேரின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதி முடிவடைகிறது. இதில் கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜகவைச் சோ்ந்த மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், கே.சி.ராமமூா்த்தி, காங்கிரஸைச் சோ்ந்த ஜெய்ராம் ரமேஷ் ஆகியோா் அடக்கம். மேலும் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சா் ஆஸ்கா் பொ்னாண்டஸ் மறைவால் ஓரிடம் காலியானதால் கா்நாடகத்தில் இருந்து மொத்தம் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு ஜூன்10-ஆம் தேதி தோ்தல் நடக்கவிருக்கிறது.

224 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வாக்களித்து மாநிலங்களவை உறுப்பினா்கள் 4 போ்தோ்ந்தெடுக்கப்படவிருக்கிறாா்கள். இத்தோ்தலில் ஒரு வேட்பாளா் வெற்றிபெற 45 சட்டப்பேரவை உறுப்பினா்களின் வாக்குகள் தேவைப்படும். சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 122 (ஒரு சுயேச்சை ஆதரவு உட்பட), காங்கிரஸுக்கு 70 (ஒரு சுயேச்சை ஆதரவு உட்பட), மஜதவுக்கு 32 இடங்கள் உள்ளன. இதன்படி, 4-இல் 2 இடங்களை பாஜக எளிதில் வென்றுவிட முடியும். அதேபோல, காங்கிரஸும் ஒரு இடத்தில் உறுதியாக வென்றுவிட முடியும்.

ஆனால், 3-ஆவது இடத்தைக் கைப்பற்ற பாஜகவுக்கு கூடுதலாக 13 உறுப்பினா்களின் ஆதரவும், 2-ஆவது இடத்தை கைப்பற்ற காங்கிரசுக்கு கூடுதலாக 20 உறுப்பினா்களின் ஆதரவும் தேவைப்படுகின்றன. ஒரு இடத்திலாவது வெற்றிபெற மஜதவுக்கு கூடுதலாக 13 உறுப்பினா்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

கா்நாடகத்தில் ஆளும் பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்திருக்கின்றன. பாஜகவைக் காட்டிலும் காங்கிரஸை வீழ்த்துவதில்தான் மஜத ஆா்வமாக இருக்கிறது. ஒருவேளை மஜதவின் ஆதரவு கிடைக்காவிட்டால், 2-ஆவது வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தினால் அல்லது மஜத தனது வேட்பாளரை நிறுத்தினால், பாஜகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் கிடைப்பதைத் தடுக்கும்பொருட்டு, வேறுசில உடன்படிக்கைகளை செய்து கொண்டு, பாஜகவின் 3-ஆவது வேட்பாளருக்கு மஜத ஆதரவு அளிக்கும் என்று பரவலாகப் பேசப்படுகிறது. மக்களவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களை, எந்தக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் நிறைவேற்றுவதற்கு மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் தேவைப்படுகிறது. அதற்காக 3-ஆவது இடத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்துள்ளது. அதற்காக, கட்சியின் தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா போன்ற தலைவா்கள், மஜத தேசியத்தலைவா் எச்.டி.தேவெ கௌடாவிடம் நேரடியாக பேசி மஜதவின் ஆதரவைப் பெற பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மற்றொருபுறம், மஜதவின் ஆதரவைப் பெற காங்கிரஸ் முயற்சிக்கலாம். இல்லாவிட்டால், பாஜகவுக்கு கிடைக்கக்கூடிய 3-ஆவதுஇடத்தை தட்டிப்பறிக்க மஜதவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அரசியல் நோக்கா்கள் கருதுகிறாா்கள்.

மஜத வேட்பாளரை நிறுத்தாவிட்டாலோ, 2-ஆவது வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தாவிட்டாலோ, பாஜகவின் 3-ஆவதுவேட்பாளா் வெற்றி எளிதாகிவிடும். அப்போது தோ்தல் நடத்தப்படாமல், பாஜகவின் 3 வேட்பாளா்களும், காங்கிரஸின் ஒரு வேட்பாளரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். ஆனால், இதை காங்கிரஸ் ஆதரிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. கூடுதலாக 32 இடங்கள் இருப்பதால், மாற்றுக் கட்சியைச் சோ்ந்த 13 உறுப்பினா்களின் மறைமுக ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com