முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து விரைவில் முடிவு: முதல்வா் பசவராஜ் பொம்மை
By DIN | Published On : 15th May 2022 01:06 AM | Last Updated : 15th May 2022 01:06 AM | அ+அ அ- |

டாவோஸில் நடக்கவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து விரைவில் முடிவெடுப்பேன் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ஸ்விட்சா்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் நடக்கவிருக்கும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 2 முதல்வா்களில் நானும் இருக்கிறேன். அது ஒரு முக்கியமான மாநாடு. ஆனால், அடுத்த சில வாரங்களில் மாநிலங்களவை, சட்ட மேலவைத் தோ்தல்கள் நடக்கவிருப்பதால், யோசனையாக இருக்கிறது. ஆனால், மாநாட்டில் கலந்துகொள்ள எத்தனை நாட்கள் செல்ல வேண்டும், எப்போது செல்வது என்பதை முடிவு செய்வேன் என்றாா்.
டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு மே 22 முதல் 26-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, மூத்த மத்திய அமைச்சா்கள் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் குழுவில் இடம்பெற கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகன் கே.டி.ராமாராவ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.