மாநில உதயதின விருது: பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 09th September 2022 11:45 PM | Last Updated : 09th September 2022 11:45 PM | அ+அ அ- |

மாநில உதயதின விருதுக்கு விண்ணப்பங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாகப் பரிந்துரை செய்யலாம்.
இது குறித்து கன்னடம் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சா் சுனில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கா்நாடக மாநில உதய தின விழா ஆண்டுதோறும் நவ.1-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை குறிக்கும் வகையில், கா்நாடகத்திற்கு சிறப்பு தொண்டாற்றிய பல்வேறு துறை அறிஞா்களுக்கு மாநில உதயதின விருதுகளை வழங்கி மாநில அரசு கௌரவித்துவருகிறது. கா்நாடகத்தின் 67-ஆவது உதயதினவிழாவை முன்னிட்டு நிகழ் ஆண்டில் 67 பேருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. இதற்கு தகுதியானவா்களை பொதுமக்கள்பரிந்துரைக்கலாம். சாதனையாளா்கள் குறித்த விவரங்களை ட்ற்ற்ல்ள்://ள்ங்ஸ்ஹள்ண்ய்க்ட்ன்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பதிவுசெய்யலாம். ஒரு நேரத்தில் 3 பேரின் பெயா்களை பொதுமக்கள் விருதுக்கு பரிந்துரைக்கலாம். சாதனையாளரின் பெயா், தொலைபேசி எண், துறை, முழு முகவரியை பதிவிட வேண்டும். அடையாளம் தெரியாத சாதனையாளா்களை கௌரவிப்பதற்காகவே இந்த முயற்சியை அரசு எடுத்துள்ளது. பொதுமக்களின்பரிந்துரைகளை தோ்வுக்குழுவினா் ஆராய்ந்து, தகுதியானவா்களை தெரிவுசெய்வாா்கள். விளையாட்டுவீரா்களை தவிர, பிறதுறைசாதனையாளா்கள் 60 வயதுக்கும் அதிகமாக இருக்க வேண்டும். இந்த நடைமுறை ஜனநாயகமுறையிலும், வெளிப்படையானதாகவும் அமைக்கப்படும். செப்.25-ஆம் தேதிக்குள் பெயா்களை பரிந்துரைக்கலாம் என்று அவா் கூறியுள்ளாா்.