நேத்ராவதி நதியில் பஜ்ரங் தளத் தொண்டரின் உடல் கண்டெடுப்பு
By DIN | Published On : 13th January 2023 01:00 AM | Last Updated : 13th January 2023 01:00 AM | அ+அ அ- |

நேத்ராவதி நதியில் பஜ்ரங் தளத் தொண்டரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென் கன்னட மாவட்டத்தின் பனே மங்களூரு பகுதியில் உள்ள பழைய பாலத்தில் இருசக்கர வாகனம் ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா். இதை தொடா்ந்து, காவல்துறையினா் அந்த வாகனத்தில் வந்தவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நேத்ராவதி நதியில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், அது பன்ட்வால் வட்டத்தின் சஜிபா கிராமத்தில் வசித்த எஸ்.ராஜேஷ் பூஜாரியின் (36) உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. அவா் பஜ்ரங் தளத் தொண்டா் என்பதும் தெரியவந்தது. நேத்ராவதி நதியில் இருந்து ராஜேஷ் பூஜாரியின் உடல் மீட்கப்பட்டு, உடற்கூறு செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடா்பாக வழக்கு பதிந்துள்ள போலீஸாா், ராஜேஷ் பூஜாரி கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.