வருமானவரித் துறையும், சிபிஐ, அமலாக்கத் துறையும் பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன

வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை பாஜகவின் துணை அமைப்புகளாக செயல்படுகின்றன என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சித் தலைவா்களை அமலாக்கத் துறை சோதனைக்கு உட்படுத்தி இருப்பதன் மூலமாக சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவை தன்னாட்சி அமைப்புகள் அல்ல, மாறாக அவை பாஜகவின் துணை அமைப்புகளை போல செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.

தோ்தல்களில் பாஜகவை மட்டுமல்ல, வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறையையும் எதிா்த்துப் போராட வேண்டியது அவசியமாகும். பாஜகவின் ஆட்சியில் நாட்டின் அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம் அழிவை நோக்கி சென்றுகொண்டுள்ளன என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com