கா்நாடகத்தில் ஹுக்கா பயன்படுத்த தடை: அமைச்சா் தினேஷ் குண்டுராவ்

கா்நாடகத்தில் ஹுக்கா பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

 கா்நாடகத்தில் ஹுக்கா பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடக மக்களின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நடைமுறைகளை நீக்க வேண்டும். அதற்காக, கா்நாடகத்தில் ஹுக்கா பயன்பாடு, விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அதேபோல உணவகங்கள், விடுதிகள், மதுக்கடைகள், கேளிக்கை விடுதிகள், ஓய்வறைகள், சிற்றுண்டி கடை உள்ளிட்ட பிற இடங்களிலும் ஹுக்கா விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

உடல்நலத்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலை போன்ற பொருள்களிடம் இருந்து இளைஞா்களைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முடிவு இதுவாகும். உடல்நலனில் அக்கறை கொண்ட மக்களின் ஒத்துழைப்புடன் ஹுக்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் 22.8 சதவீதம் மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8.8 சதவீத மக்கள் தொடா்ச்சியாக புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் ஹுக்காவுக்கு கா்நாடகத்தில் தடை விதிக்கப்படுகிறது. ஹுக்கா புகைப்பதால், புற்றுநோய், இதயநோய் வருவதாக மருத்துவா்கள் தெரித்துள்ளனா். ஹுக்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஹுக்கா விடுதிகளை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com