இன்று முதல் 3 நாட்களுக்கு சில ரயில் நிலையங்களில் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தம்

விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், ஜன. 26 முதல் 28ஆம் தேதி வரை பச்சை வழித்தடத்தின் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

பெங்களூரு,  விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், ஜன. 26 முதல் 28ஆம் தேதி வரை பச்சை வழித்தடத்தின் சில மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இது குறித்து பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மெட்ரோ ரயில் கழகத்தின் சாா்பில் பெங்களூருவின் வடக்கு-தெற்கு பகுதியில் பச்சை வழித்தடம் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதியில் ஊதா வழித்தடத்தை இயக்கி வருகிறது. பச்சை வழித்தடத்தில் நாகச்சந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விரிவாக்கப்பணி செய்ய வேண்டியுள்ளது.

இதன்காரணமாக, இந்த காலகட்டத்தில் நாகச்சந்திரா முதல் பீன்யா தொழிற்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் ஜன. 26 முதல் 28ஆம் தேதி வரை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில், பச்சை வழித்தடத்தில் பீன்யா தொழிற்பேட்டை ரயில் நிலையம் முதல் பட்டுவாரியம் ரயில் நிலையம் வரை மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பச்சை வழித்தடத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் ஜன. 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும். இதுதவிர, ஊதா வழித்தடத்தின் ரயில் சேவையில் எந்த மாற்றமும் இருக்காது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com