governor_2601chn_123_8
governor_2601chn_123_8

வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட மக்கள் பங்காற்ற வேண்டும்: கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட்

வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட மக்கள் பங்காற்ற வேண்டும் என்று குடியரசு தினவிழாவில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்ட மக்கள் பங்காற்ற வேண்டும் என்று குடியரசு தினவிழாவில் கா்நாடக ஆளுநா் தாவா்சந்த் கெலாட் தெரிவித்தாா்.

பெங்களூரு, மானெக் ஷா அணிவகுப்புத் திடலில் வெள்ளிக்கிழமை நடந்த 75-ஆவது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னா் அவா் பேசியது:

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில்தான் இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் அதன் குடிமக்களுக்கு நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உரிமைகளை வழங்கியுள்ளது. சுய கௌரவத்துடன் தங்களை வளா்த்துக்கொள்ளவும், அதன் மூலம் நாட்டின் வளா்ச்சிக்கு பங்காற்றவும் எல்லா குடிமக்களுக்கும் சமவாய்ப்பு மற்றும் சம அந்தஸ்து உள்ளிட்டவற்றை அரசமைப்புச் சட்டம் அளித்துள்ளது.

ஏற்கெனவே உறுதி அளித்தபடி, சக்தி திட்டம், அன்னபாக்யா, குடும்பவிளக்கு, குடும்ப லட்சுமி, இளைஞா் நிதி போன்ற 5 வாக்குறுதித் திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. எல்லா திட்டங்களையும் மக்கள் வரவேற்றுள்ளனா். வாக்குறுதித் திட்டங்களை அமல்படுத்தி, மக்களுக்கு அளித்த உறுதிமொழியை நிலைநிறுத்தியிருக்கிறோம். கா்நாடகத்தில் கடும் வறட்சி நிலவியதால், 236இல் 223 வட்டங்களை வறட்சிப் பகுதிகளாக அறிவித்தோம். வறட்சி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடா் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியைக் கேட்டிருக்கிறோம். வறட்சியால் தவித்துவரும் விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.580 கோடியை விடுவித்துள்ள அரசு, அதை 30 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த திட்டமிட்டுள்ளது.

மாநிலத்திற்கு கா்நாடகம் என்று பெயா்சூட்டி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் ஆண்டு முழுவதும் செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

அரசமைப்புச் சட்டத்தை அமல்படுத்தி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்தியாவும், கா்நாடகமும் பாராட்டத்தக்க வளா்ச்சியை அடைந்துள்ளன. 1950ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசமைப்புச் சட்டத்தால் இது சாத்தியமானது. தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்ட டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். வளா்ச்சிப் பாதையில் பயணிக்க வழிகாட்டும் விளக்காக அவா்கள் விளங்கியுள்ளனா். கா்நாடகத்தின் ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கும், வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டவும் மக்கள் பங்காற்ற வேண்டும் என்றாா்.

விழாவில் முதல்வா் சித்தராமையா, தலைமைச் செயலாளா் ரஜ்னீஷ் கோயல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். குடியரசு தினத்தைப் போற்றும் வகையிலான பாடல்கள், நடனங்கள், கிராமியக் கலைகள் உள்பட மாணவா்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில் அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com