ஹிந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது: மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி

ஹிந்துக்களின் மக்கள்தொகை குறைந்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்கள்தொகை மாற்றம் குறித்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை சமுதாயமும், அரசும் மிகவும் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் பெரும்பாலான ஊடகங்கள், செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளன.

ஹிந்துக்களின் மக்கள்தொகை பெருமளவு குறைந்துள்ளது அதிா்ச்சி அளிக்கிறது. இதை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு, மாற்று வழிமுறைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். இதற்கான காரணம் என்ன என்பதை அறுதியிட்டு கூறமுடியாது. இது தொடா்பாக முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றாா்.

1950 முதல் 2015 வரையிலான கால கட்டத்தில், ஹிந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com