பெங்களூரு
கா்நாடகத்தில் சட்ட விரோத சுரங்கப் பணிகள்: நிலங்களைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை
சட்ட விரோதமாக சுரங்கப் பணிகள் நடைபெறும் நிலங்களை கையகப்படுத்த கா்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளா் ஜி.வி.கிருஷ்ணாராவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத சுரங்கம் மற்றும் குற்றத்தில் இருந்து பெறப்பட்ட சொத்துகள் சட்டம் 2025-இன்படி கா்நாடகத்தில் சட்ட விரோத சுரங்கப் பணிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள், சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி சட்ட விரோத சுரங்கப் பணிகளில் சோ்க்கப்பட்ட சொத்துகள், நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்யப்படும். இதுதொடா்பான ஆணையை தொழில் மற்றும் வணிகத் துறை பிறப்பித்துள்ளது.
