மதுராந்தகம், டிச. 4: கருங்குழியில் உள்ள திருவள்ளுவர் தமிழ் பட்டறையின் சார்பில் மாநில அளவிலான கவிதைப் போட்டி நடத்துகிறது.
இப் போட்டியில் பங்கேற்பவர்கள் "உழவே தலை' என்ற தலைப்பில் மரபு அல்லது புதுக்கவிதையாக 24 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டும். எழுதிய கவிதையுடன் சரியான முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன் குறிப்பிட்டு, திருவள்ளுவர் தமிழ்ப் பட்டறை, நெ.7, ஞானகிரீஸ்வரன் பேட்டை, கருங்குழி அஞ்சல், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு 2011-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிக்குள் தபாலில் அனுப்ப வேண்டும்.வரபெற்ற கவிதைகளை சிறந்த கவிஞர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இத் தகவலை திருவள்ளுவர் தமிழ் பட்டறையின் செயலர் தமிழ்நிலவன் தெரிவித்தார்.