கடலூர், டிச. 11: அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும வகையில், கடலூரில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் சார்பில், கிறிஸ்துமஸ் விழா புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது.
÷நிகழ்ச்சியில் கடலூர் எம்எல்ஏ கோ.அய்யப்பன் கேக் வெட்டினார். ஏ.அருளானந்தம் அடிகள் தலைமை தாங்கினார். அல்ஃபோன்ஸ் சந்தானம் அடிகள் வரவேற்றார். ஏ.எல்.சி. பேராயர் ஆர்.டி.விஜயகுமார், புதுவை கடலூர் மறை மாவட்ட புரோவின்ஷியல் ஸிஸ்டர் மரியா எப்பிபெனி, பி.எஸ்என்.எல். பொது மேலாளர் மார்ஷல் அந்தோனி லியோ, சார்பு நீதிபதி ஹேமலதா டேனியல், வர்த்தகப் பிரமுகர்கள் சி.ஏ.ரகீம், மகாவீர்மல் மேத்தா, மற்றும் கண்ணன், சி.ஏ.தாஸ், எம்.நிஜாமுதீன், கவிஞர் பால்கி, பாமக சார்பில் போஸ் ராமச்சந்திரன், காங்கிரஸ் கட்சி சார்பில் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.