கடலூர், டிச. 11: மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை 4 இடங்களில் நடந்த சாலைமறியல் போராட்டத்தில், சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
÷மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும். முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், பகுதி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரணமாக வழங்க வேண்டும். மழை நீரால் சூழப்பட்ட வீடுகளுக்கு ரூ.2,500 நிவாரணத் தொகையுடன் 30 கிலோ அரிசி, 10 லிட்டர் மண்ணெண்ணெய், இலவச வேட்டி, சேலை வழங்க வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனே வெளியேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த மறியல் போராட்டம் நடந்தது.
÷கடலூரில் ஜவான்ஸ் பவன் அருகில் நடந்த மறியல் போராட்டத்துக்கு, நகரச் செயலாளர் சுப்புராயன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் செ.தனசேகரன், மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் ஜி.மாதவன், பண்ருட்டி வட்டச் செயலாளர் சேதுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.கருப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
÷மறியலில் ஈடுபட்ட 160 பேரைப் போலீஸôர் கைது செய்தனர். அவர்களில் 50 பேர் பெண்கள். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக காட்டுமன்னார்கோயிலில் வட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ் தலைமையில் 110 பேரும், குறிஞ்சிப்பாடியில் ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.ராஜி தலைமையில் 60 பேரும், சிதம்பரத்தில் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் 70 பேரும் கைது செய்யப்பட்டனர்.