செஞ்சி, டிச. 11: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் உற்சவருக்கு ரூ.1 கோடி செலவில் தங்கத்தேர் செய்யப்பட்டுள்ளது.
÷தங்கத்தேர் வெள்ளோட்ட விழா, வெள்ளிக்கிழமை இரவு மேல்மலையனூர் அங்காளம்மன் வளாகத்தில் நடைபெற்றது.
÷இதில் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தார்.
÷விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேரில் வலம் வந்து அங்காளம்மனை வழிபாடு செய்தனர்.
÷விழாவில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.தங்கராஜ் வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.
÷ஆரணி எம்.பி. எம்.கிருஷ்ணசாமி, மேல்மலையனூர் எம்எல்ஏ.பா.செந்தமிழ்ச்செல்வன், அறங்காவலர் குழுத் தலைவர் பூ.துரைபூசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
÷புதிய உதவி ஆணையர், செயல் அலுவலர் குடியிருப்பு மற்றும் புதிய அலுவலக கட்டடம் உள்ளிட்டவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி திறந்து வைத்து பேசினார்.
÷விழாவில், செஞ்சி எம்.எல்.ஏ. வே.கண்ணன், செஞ்சி பேரூராட்சித் தலைவர் செஞ்சிமஸ்தான், செஞ்சி ஊராட்சி குழுத் தலைவர் ரத்தனாகணபதி, திண்டிவனம் உதவி ஆட்சியர் பாஜிபாக்ரே ரோகிணி ராம்தாஸ், ஒன்றிய குழுத் துணைத் தலைவர் பூ.செல்வராஜ், திமுக ஒன்றியச் செயலர்கள் ஆர்.விஜயகுமார், எல்.பி.நெடுஞ்செழியன், அ.சீ.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
÷இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சி.குமாரதுரை நன்றி கூறினார்.