திருவள்ளூர், டிச. 11: திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் சனிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
÷சட்டீஸ்கர் மாநில ஆளுநராக இருந்தவர் நரசிம்மன். அன்மையில் ஆந்திர மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஆளுநர் நரசிம்மன் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலுக்கு வந்தார். அவரை கோயிலின் கெüரவ ஏஜென்ட் நரசிம்மன் வரவேற்று உபசரித்தார். பின்னர் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆளுநர் நரசிம்மன் தனது குடும்பத்துடன் தரிசனம் செய்து விட்டு கோயில் குளத்தைச் சுற்றி வந்து குளத்தில் உப்பு, மிளகு ஆகியவற்றை தூவினார். பின்னர் புறப்பட்டுச் சென்றார்.