40 சதவீத கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் முறையீடு

காஞ்சிபுரம், டிச. 11:  விசைத்தறி தொழிலாளர்கள் 40 சதவீத கூலி உயர்வு கேட்டு விசைத் தறி தொழிலாளர்கள் ஊதிய மறு நிர்ணய குழுவிடம் முறையிட்டனர். ÷மதுரை தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ணபாண்டியன் தலைமையில் 7 உறுப்
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம், டிச. 11:  விசைத்தறி தொழிலாளர்கள் 40 சதவீத கூலி உயர்வு கேட்டு விசைத் தறி தொழிலாளர்கள் ஊதிய மறு நிர்ணய குழுவிடம் முறையிட்டனர்.

÷மதுரை தொழிலாளர் ஆணையர் ராதாகிருஷ்ணபாண்டியன் தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

÷இக் குழுவினர் விசைத் தறி தொழிலாளர் குறைந்தபட்ச ஊதிய மறு நிர்ணயம் தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

÷இவர்கள் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்கள் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

÷இந்த ஆய்வின்போது, விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை முறையிட்டனர்.

÷தொழிலாளர்கள் தற்போது வாங்கும் ஒரு நாள் ஊதியம் ரூ.200 உடன் 40 சதவீத கூலி உயர்வு வேண்டும் என்று முறையிட்டனர்.

÷இதுகுறித்து குழுவின் தலைவர் ராதாகிருஷ்ண பாண்டியன் நிருபர்களிடம் கூறியது: ஏற்கெனவே சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டோம். தற்போது காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.

÷இத் தொழிலாளர்கள் தங்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு கேட்டுள்ளனர்.

÷நிர்வாகத் தரப்பினர் நூல் விலை உயர்வு குறித்து கூறினர். இரு தரப்பினர் கருத்தையும் அரசுக்கு தெரிவிப்போம்.

÷இறுதி ஆய்வு அறிக்கையை வரும் டிசம்பர் 29-ம் தேதி முடிவு செய்வோம் என்றார். இக் கூட்டத்தில், அகில இந்திய விசைத்தறி வாரிய உறுப்பினர் அரங்கநாதன் உள்பட பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com