உத்தரமேரூர், டிச. 18: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் புகாருக்கு ஆளாகி ராஜினாமா செய்த ஆ.ராசாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உள்படுத்தி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி உத்தரமேரூர் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் தொடர் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
÷உத்தரமேரூர் ஒன்றியம் ஆலஞ்சேரி, குண்ணவாக்கம், புத்தளி, நெய்யாடுபாக்கம், ஆகிய கிராமங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடைபெற்றன. கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். தலைமைக் கழக பேச்சாளர்கள் ஆவடிகுமார், கவிமுரசு பழநி பிரசாரம் செய்தனர்.
÷ஆலஞ்சேரியில் ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஆர்.புருஷோத்தம்மன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், துணைத் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் குண்ணவாக்கத்தில் பேரவை இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் ஒழையூர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை நன்றி கூறினார்.