பண்ருட்டி, டிச.18: பண்ருட்டி வட்டாரத்தில் கைத்தெளிப்பான்கள் 50 சதவீதம் மானிய விலையில் ரூ. 1,000-க்கு, தார்பாய் மானிய விலையில் ரூ. 4,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
÷தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் கிலோ ரூ. 19.20 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் பண்ருட்டி வேளாண்மை அலுவலர் எம்.அமரேசன் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் என்.டி.ரவிசேகர் ஆகியோரை தொடர்பு கொண்டு பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ் தெரிவித்துள்ளார்.