காஞ்சிபுரம், டிச. 17: ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது என்று தேமுதிக மகளிரணி முடிவு செய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட தேமுதிக மகளிரணிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி செயலர் எஸ்.தேவிகா தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் மகளிரணியை உருவாக்குவது, சட்டப்பேரவை தேர்தலுக்காக மகளிர் பூத் கமிட்டிகளை அமைப்பது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, சேலம் மகளிர் மாநாட்டில் அதிக மகளிர் பங்கேற்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக் கூட்டத்தில் நகர மகளிர் அணி செயலர் ராணி, ஒன்றிய மகளிர் அணி செயலர் கலா, செவிலிமேடு பேரூராட்சி மகளிர் அணி செயலர் ஞானசெüந்தரி, காஞ்சிபுரம் நகர செயலர் ஏகாம்பரம், ஒன்றிய செயலர் தினகரன், செவிலிமேடு பேரூராட்சி செயலர் எம்.அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.