திருவள்ளூர், டிச. 26: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு வார்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். இதனை மாற்றி ஒரு ஊராட்சியில் ஒரு வார்டு உறுப்பினர் இருக்கத்தக்க நிலையில் இடம்பெறச் செய்ய ஊராட்சியில் மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கும் பணி நடைபெற்று உரிய அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது.
சரிபார்க்கப்பட்ட மக்கள் தொகைப் பட்டியலை வரும் புதன்கிழமை நடத்தப்படும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மக்களின் பார்வைக்கு வைத்து மக்களின் கருத்துகளை கேட்டு பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.