ஐடிஐ படித்தவர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், ஜன. 12: தமிழகம் முழுவதும் தொழில் பயிற்சி (ஐடிஐ) முடித்துள்ள 20 ஆயிரம் பேருக்கு போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் ஆகியவற்றில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள

விழுப்புரம், ஜன. 12: தமிழகம் முழுவதும் தொழில் பயிற்சி (ஐடிஐ) முடித்துள்ள 20 ஆயிரம் பேருக்கு போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் ஆகியவற்றில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள் சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

÷காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு சமீபத்தில் அறிவித்ததை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

÷ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் ஏ.தமிழழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் டி.பாரூக் பாஷா, பி.செல்வபெருமாள், என்.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷போக்குவரத்துக் கழக ஏஐடியுசி மாநில துணைத் தலைவர் ஜி.தங்கவேலு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைத் தலைவர் ஏ.வி. சரவணன், சங்க மாவட்ட சிறப்பு தலைவர் எம்.கலியபெருமாள், மாவட்ட செயலர் பா. ஜோதி நரசிம்மன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கடலூர் மாவட்டத் தலைவர் பி. சிவகுமார், திருவண்ணாமலை மாவட்டச் செயலர் செந்தில்குமார், சங்க துணைச் செயலர் பி. சேவகப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com