கண்கள் தானம்

கள்ளக்குறிச்சி, ஜன. 12: கள்ளக்குறிச்சியை அடுத்த பம்புதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் வி.கே.ராமசாமி (68) செவ்வாய்க்கிழமை காலமானதையடுத்து அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டன. ÷வி.கே.ராமசாமியின்

கள்ளக்குறிச்சி, ஜன. 12: கள்ளக்குறிச்சியை அடுத்த பம்புதோட்டம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் வி.கே.ராமசாமி (68) செவ்வாய்க்கிழமை காலமானதையடுத்து அவரது கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

÷வி.கே.ராமசாமியின் கண்களை தானமாகத் தர அவரது மனைவி ரா.புஷ்பாம்மாள், மகன்கள் ரா.மயில்வேல், ரா.சேகர், ரா.சீனிவாசன், ரா.மனோகரன், ரா.ஜெயக்குமார் ஆகியோர் முன்வந்தனர். கள்ளக்குறிச்சி அரிமா சங்க தலைவர் ஜி.கே.ராஜேந்திரன், செயலாளர் வீ.ராமசுப்பையா, பொருளாளர் எம்.சுரேஷ்குமார் உள்ளிட்ட அரிமா சங்கத்தினர் முன்னிலையில் கண்கள் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com