கலப்பட டீ தூள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சீல்

விழுப்புரம், ஜன. 12: விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் கலப்பட டீ தூள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தார். ÷விக்கிரவாண்டி-சென்னை தேசி

விழுப்புரம், ஜன. 12: விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் கலப்பட டீ தூள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தார்.

÷விக்கிரவாண்டி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஆர்.எம். நவீன அரிசி ஆலை செயல்பட்டு வந்தது. அது தற்போது செயல்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இங்கு  சுகாதார அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் ஆய்வு செய்வது வழக்கம்.

÷அப்படி ஆய்வு செய்ய சென்றபோது அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கு கலப்பட டீ தூள் தயாரிக்கப்படுவது தெரிந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர் சென்று அந்த தொழிற்சாலையை சோதனையிட்டார். அங்கு கலப்பட டீ தூள் தயாரிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. டீ தூள்  தயாரிப்பதற்கான மூலப்பொருள்களான பாலிபுராபைலென், ஹோமோபாலிமர் என்ற ரசாயனங்கள், புளியங்கொட்டை, முந்தித்தூள், கலப்பட டீ தூள் உள்ளிட்ட ரூ.50,000 மதிப்புள்ள 118 மூட்டைகளை பறிமுதல் செய்து, அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தார்.

÷இந்த டீயை குடிப்பவர்களுக்கு புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு போன்றவை வரும் என்று துணை இயக்குநர் தெரிவித்தார். இதுபோன்ற நிறுவனங்கள் வேறு எங்கேனும் செயல்பட்டால் பொதுமக்கள் தகவல் தரலாம் என்றும் கூறினார்.

÷இங்கு தயாரிக்கப்பட்ட டீ தூள் சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது அங்கிருந்த ஆவணங்களிலிருந்து தெரியவந்தது.

கலப்பட டீ தூள் தயாரிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com