கூட்டுறவு ஊழியர்கள் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த கோரிக்கை

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி யூனியன் பிரதேச கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பணி ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரி யூனியன் பிரதேச கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு பணி ஓய்வு வயதை 60-ஆக உயர்த்த வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச கூட்டுறவு சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

÷தீர்மான விவரம்: மத்திய அரசு ஆணைப்படி, புதுச்சேரி அரசு அறிவித்த 6-வது ஊதியக்குழு சம்பள விகிதத்தை அரசு நிதியுதவியுடன் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு அமல்படுத்தவேண்டும். அரசு அறிவித்த தினக்கூலி ரூ.233-ஐ தினக்கூலி ஊழியர்களுக்கு அமலாக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளை ஒருங்கிணைத்து தனி வாரியத்தை ஏற்படுத்த வேண்டும்.

 கூட்டமைப்பின் தலைவர் பா.லட்சுமணசாமி, பொதுச் செயலாளர் ஜி.நாகராஜன், துணைத் தலைவர் எஸ்.ஏழுமலை, என்.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com