சமத்துவப் பொங்கல் விழா

காஞ்சிபுரம், ஜன. 12:  காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ÷ஏனாத்தூர், நந்தனார் ஆன்மிகப் பேரவை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பேரவைத் தலைவர்

காஞ்சிபுரம், ஜன. 12:  காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

÷ஏனாத்தூர், நந்தனார் ஆன்மிகப் பேரவை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு பேரவைத் தலைவர் வி.எல். சத்தியசீலன் தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் வரதன் முன்னிலை வகித்தார். இதில் மகளிருக்கு கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நந்தனார் ஆன்மிகப் பேரவை நகரச் செயலர் சேகர் (எ) டி.பி.சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் இன்பெண்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு தலைமை ஆசிரியை விக்டோரியா ஜெசிந்தா தலைமை வகித்தார். இதில் மாணவிகள் சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாடாடினர். இதையொட்டி, கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், கோலப்போட்டிகளும் நடைபெற்றன.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு, ஜன. 12: செங்கல்பட்டை அடுத்துள்ள வேதநாராயணபுரம் வித்யாசாகர் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

÷இதையொட்டி, கல்லூரி மாணவிகள் சமத்துவப் பொங்கலிட்டனர். 5பானைகளில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் வைக்கப்பட்டது.

÷விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம். மோகன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் ஹஸ்திமல் சுரானா முன்னிலை வகித்தார்.

வித்யாசாகர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் விகாஸ் சுரானா வரவேற்றார்.

÷பொருளாளர் சுரேஷ் கன்காரியா, இயக்குநர் பி.ஜி. ஆச்சார்யா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவையொட்டி கல்லூரி மாணவிகள் நாட்டுப்புறப் பாடல், வில்லுப் பாட்டு  உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.  கல்லூரி முதல்வர் கரு. நாகராசன் நன்றி கூறினார்.

விளையாட்டுப் போட்டிகள்

ஸ்ரீபெரும்புதூர், ஜன. 12   ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், பொடவூர் மற்றும் மேவளூர்குப்பம் ஆகிய ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

÷பொடவூர் மற்றும் மேவளூர்குப்பம்  ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பொங்கல் திருநாளை முன்னிட்டு நீளம் தாண்டுதல்,சதுரங்கம், கேரம்,ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட  விளையாட்டுப் போட்டிகள் அந்தந்த ஊராட்சிப் பகுதிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் செவ்வாய்கிழமை நடத்தப்பட்டன.

÷பொடவூர் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விளையாட்டுப் போட்டிக்கு ஊராட்சித் தலைவர் ஜீவா ரவி தலைமை வகித்தார்.

கல்விக் குழுத் தலைவர் பொடவூர் ரவி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் துணைத் தலைவர் திணமணி வரவேற்றார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

÷பள்ளித் தலைமையாசிரியர் சுதா, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேவளூர்குப்பம் ஊராட்சி:  இதே போல, மேவளூர்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற போட்டிகளுக்கு ஊராட்சித் தலைவர் கோபால் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் புனிதா மேரி, ஊராட்சி துணைத் தலைவர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி, ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்கள் சமத்துவப் பொங்கலிட்டனர்.

மதுராந்தகம், ஜன. 11: அச்சிறுபாக்கம ஒன்றியம், பள்ளிப்பேட்டை ஊராட்சியில் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

÷இப் போட்டியில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், செஸ், கேரம் உள்ளிட்ட 10 விளையாட்டுப் போட்டிகள் கிராம சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே நடத்தப்பட்டன.÷ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேலு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com