ஜனவரி 20 முதல் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார். ÷வில்லியனூர் கூடப்பாக்கத்தில், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் சி

புதுச்சேரி, ஜன. 12: புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் வி.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

÷வில்லியனூர் கூடப்பாக்கத்தில், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி மற்றும் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ. 1 விலையில் 5 கிலோ அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இவ் விழாவில் முதல்வர் பேசியது:

÷புதுச்சேரியில் ஜனவரி 20 முதல் மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவற்றில் மாணவர்கள் தங்களது பஸ் அடையாள அட்டையை காண்பித்து ரூ.1 கட்டணமாகக் கொடுத்து சீட்டு பெற்றுக்கொண்டு அவரவர் பள்ளிகளில் இறங்கிக் கொள்ளலாம்.

÷இந்த பஸ்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 3 முதல் 7 மணி  வரையிலும் இயங்கும். பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கென அவர்கள் மட்டுமே பயணம் செய்யும் வகையில் சிறப்பு பஸ்கள்  இயக்கவிருக்கிறோம்.

÷முகூர்த்த நாள்களில் மாணவர்கள் பஸ்களில் ஏற முடியாத நிலை உள்ளது. பஸ் கூரை மீது அமர்ந்தும், படியில், ஏணியில் நின்றுகொண்டும் பள்ளிகளுக்கு பயணிக்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

÷சித்திரை 1-ல் வெள்ளை அரிசி: தமிழ்ப் புத்தாண்டு சித்திரை 1-ல் புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைவருக்கும் வெள்ளை நிற அரிசி வழங்கப்படும். ஜனவரி 12 முதல் மஞ்சள் அட்டைக்கு மாதம் 5 கிலோ கோதுமையும், 5 கிலோ அரிசியும் ரூ.10-க்கு வழங்கப்படும். சிவப்பு அட்டைதாதர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். இனி ஒவ்வொரு மாதமும் தடையின்றி அரசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

÷விழாவில் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி பேசியது:

÷அனைவருக்கும் கலர் டிவி: புதுச்சேரி மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்க வேண்டும். அதற்கான பணிகளை முதலமைச்சர் செய்யவேண்டும். ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி, கோதுமை திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 1.37 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களும், 3 லட்சம் மஞ்சள் அட்டைதாரர்களும் பயனடைய உள்ளனர். மத்திய அரசின் ஆயுள் காப்பீடு திட்டம், தபால் நிலையங்கள், எல்.ஐ.சி. ஆகியவற்றின் ஏழை எளியோருக்கான காப்பீடு திட்டங்களை அவர்களிடத்தில் தெரிவிக்க இருக்கிறோம். மத்திய அரசிடம் நிதி பெற்று குடிசை இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என்றார்.

÷சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், நல மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மு.கந்தசாமி, எதிர்கட்சித் தலைவர் ஏ.வி.ஸ்ரீதரன், பொது சுகாதாரத்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், மக்களவை உறுப்பினர் கண்ணன், ஊசூடு எம்எல்ஏ ஏ.ஏழுமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com