தேசிய நூலக வாரவிழாவில் மாணவர்களுக்கான போட்டிகள்

செங்கல்பட்டு, ஜன. 12: 42-வது தேசிய நூலக வாரவிழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு கட்டுரைப் போட்டிகள் கல்பாக்கம் கிளை நூலகம் சார்பில் அண்மையில் திருக்கழுகுன்றம் பிடிவிஎஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்

செங்கல்பட்டு, ஜன. 12: 42-வது தேசிய நூலக வாரவிழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான பேச்சு கட்டுரைப் போட்டிகள் கல்பாக்கம் கிளை நூலகம் சார்பில் அண்மையில் திருக்கழுகுன்றம் பிடிவிஎஸ் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

÷கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், வாயலூர் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் புதுபட்டினம் அனுபுரம், சதுரங்கபட்டினம் அணுசக்தி மத்திய பள்ளிகளைச் சேர்ந்த 9 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் 175 மாணவ மாணவியர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

வட்டம், மாவட்டம், மாநிலம் அளவில் 3-வது சுற்றுகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, நூலக விழிப்புணர்வு வாசகங்கள் எழுதும் போட்டிகள் நடைபெறுகிறது.

÷மூன்றாம் சுற்றில் முதலிடம் பெறுவோருக்கு பொது நூலகத் துறையின் சார்பில் முதல் பரிசு சிங்கப்பூர் சுற்றுலா, இரண்டாம் பரிசாக இந்திய சுற்றுலா, மூன்றாம் பரிசாக தமிழக சுற்றுலா என அறிவிக்கப்பட்டுள்ளது. ÷

வட்ட அளவில்  திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டி நிகழ்ச்சியில்  கல்பாக்கம் கிளை நூலகர் டி.மரிய அல்போன்ஸ், வாசக வட்டத் தலைவர் வேம்பு, திருக்கழுகுன்றம் கிளை நூலகர் ஜெயவேல் பள்ளி தலைமையாசிரியர் ரவிசந்திரன் மற்றும் ஆசிரியர்கள் துரைராஜ், குருசாமி, பொற்செல்வி, சுந்தரி உள்ளிட்டோர் போட்டிகளை

நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com